Header Ads

Header ADS

கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளராக பைசல் ஆப்தீன் நியமனம்


கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர அவர்களினால் இன்று (06) புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


சகல இனங்களும் செறிந்து வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் சகல இனத்தவர்களையும் உள்ளடக்கியவாறு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.


அதற்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளராகவும், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலராக கடமையாற்றிய இசட். ஏ.எம். பைசல் மாகாண முதலமைச்சரின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராக ஜே.லியாகத் அலி, மாகாண விவசாய விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எம்.எம்.நஸீர் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ஜி.கோபால

ரட்ணம் பேரவை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.