Header Ads

Header ADS

சதுரங்க போட்டியில் 3 வருடமாக தொடர் சம்பியனாக கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவி பளில் பாத்திமா இல்மா சாதனை..!


(எம்.என்.எம்.அப்ராஸ்)

அம்பாறை மாவட்ட சதுரங்க போட்டியில் 3 வருட காலமாக தொடர் சாம்பியனாக பளில் பாத்திமா இல்மா வெற்றியீட்டி சாதனை புரிந்து தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சதுரங்க சம்மேளன ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சதுரங்க சம்பியன்சிப்-2023 போட்டிகள் அம்பாறை டி.எஸ் சேனநாயக்கா தேசிய பாடசாலையில்(2023/11/11,12)திகதிகளில் நடைபெற்றது.
இதில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவி எம்.பளில் பாத்திமா இல்மா 13 வயது பெண்கள் பிரிவு சதுரங்க அனைத்து போட்டிகளிலும் வெற்றியீட்டி தொடர்ச்சியாக 3 வருடகாலமாக அம்பாறை மாவட்ட சம்பியன் எனும் பட்டத்தை தக்கவைத்துள்ளார். இவர் கல்முனையை சேர்ந்த எம்.பளில்,அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் தமிழ் பாட ஆசிரியை எஸ்.எல்.எஸ்.மர்ஜூனாஅவர்களின் புதல்வியாவர்.


No comments

Powered by Blogger.