*காத்தான்குடி தாருஸ்ஸலாம் பாலர் முன்பள்ளியின் வருடாந்த பாலர் கலை விழாவும், கௌரவிப்பு நிகழ்வும்*
காத்தான்குடி தாருஸ்ஸலாம் முன்பள்ளியின் 2023ம் ஆண்டிற்கான பாலர் கலை விழாவும் ,மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் கடந்த 10.11.2023 வெள்ளிக்கிழமை, காத்தான்குடி கலாச்சார மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
நிகழ்வின் கௌரவ அதிதியாக எலும்பியல் சத்திர சிகிச்சை நிபுணரும் ஆலோசகருமாகிய Dr. நிஹாஜ் MBBS அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
மேலும் பல சிறப்பு அதிதிகளும் விஷேட அதிதிகளும் கலந்து கொண்டு பாலர்களை ஊக்கப்படுத்தி விழாவினை மேலும் சிறப்பித்திருந்தனர். மேற்படி கலை விழாவில் பாலர்களின் மிகச்சிறப்பான கண்கவர் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றம் செய்யப்பட்டதுடன் அறிவோம் வெல்வோம் எனும் தலைப்பிலான அறிவியல் விஷேட நிகழ்வு ஒன்றும் நடாத்தப்பட்டது.
பாலர்களுக்கான கௌரவங்களும் சான்றிதழ்களும் நிகழ்வின் இறுதியில் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டதுடன் நிகழ்வின் கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்த Dr. நிஹாஜ் அவர்களின் உயர் கல்விக்கான முயற்சிகளையும் சேவையினையும் பாராட்டி பாடசாலை சார்பில் விஷேட கௌரவம் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.
நிகழ்வுகள் யாவும் அவதானி முகநூல் வழியாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டு பி.ப.6.30 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.
No comments