Header Ads

Header ADS

கல்முனை மாநகரில் இடம்பெற்ற சுதந்திர தின விழா

( எம். என். எம். அப்ராஸ்)

கல்முனை மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த 75ஆவது தேசிய சுதந்திர தின விழா,இன்று (4)கல்முனை வாசலில் நடைபெற்றது.

கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் 
ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப்,கௌரவ அதிதியாக மாநகர சபையின் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டதுடன்,நிகழ்வின் ஆரம்பமாக நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின் தேசிய கொடியை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் ஏற்றிவைத்தார் .

பின்னர் நாட்டுக்காகஉயிர்நீத்த படையினருக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்,
மாநகரில் மர நடுகையும் இடம்பெற்றது 

இதன் போது கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி,மாநகர சபை உறுப்பினர்கள்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உயர் அதிகாரிகள்,
கல்முனை வலயக்கல்வி பணிப்பளர்,
பொலிஸ் மற்றும் விசேடஅதிரடிப்படை உயர் அதிகாரிகள் மாநகர சபை உத்தியோகத்தர்கள்,அரச, தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகர்கள் என பலரும் கொண்டிருந்தனர்.

நிகழ்வின் இறுதியாக மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் நன்றியுரை நிகழ்த்தினார்.

No comments

Powered by Blogger.