அரிசி,பணம் கொடுக்கும் வகையில் அரசியல் நாம் செய்யவில்லை -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க
அரிசி,பணம் கொடுக்கும் வகையில் அரசியல் நாம் செய்யவில்லை -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க
-----------------------
(எம்.என்.எம்.அப்ராஸ்)
தேர்தல் காலம் அரிசி,பணம் கொடுக்கும் வகையில் அரசியல் நாம் செய்யவில்லை நாம் நாட்டை
கட்டியெழுப்பக்கூடிய மாற்றத்தை உருவாக்க கூடிய வகையில் செயற்படுகிறோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டம் சாய்ந்தமருது கடற்கரையில்,புதன்கிழமை (01)தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினரும்,கல்முனை தொகுதி அமைப்பாளருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாறறுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
பிள்ளைகளுக்கு நல்ல கல்வி இருக்கின்றதா? வைத்தியசாலையில் மருந்துகள் தட்டுப்பாடு, விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய போதியளவு உரம் இல்லை,விவசாயம் செய்ய வளம் இருந்தும் வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்கின்றார்கள்.இவையெல்லாம் வாக்களித்த மக்களுக்கு அரசாங்கம் என்ன செய்தது?என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்
தேர்தல் காலம் வாக்குகளை பெறுவதற்காக சிங்கள தலைவர்கள் சிங்களவர்கள் பகுதிகளுக்கு சென்று இனவாதத்தை விதைத்து வாக்குகளை பெறுகின்றனர் அதே போல் முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று இனவாதத்தை விதைத்து வாக்குகளை பெற்று வெற்றி பெற்று அங்கே இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றனர்.
ஆட்சியாளர்கள் இனவாதத்தை உருவாக்கி ஆட்சிக்கு சென்றனர்,இதன் மூலம் என்ன நடந்தது? தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த நாம் செயற்படுவோம் ஒற்றுமையை ஏறபடுத்த திசைகாட்டியால் மாத்திரம் முடியும்
மாலைதீவில் கடல் வளத்தை கொண்டு முன்னோக்கி சென்றுள்ளனனர்,ஆனால் எமது நாட்டில் உள்ள ஆட்சியாளர்கள் வளங்களை கொண்டு என்ன திட்டங்களை செய்து இருக்கின்றனர்?
நாட்டின் சுற்றுலாத்துறை,விவசாயம்,கடல் வளம்,கணியம்,உட்பட ஏனைய வளங்களைப் சரியாக பயன்படுத்தி நாம் நாட்டை கட்டியெழுப்புவோம்.
ஒலுவில் துறைமுகத்தில் அதிக பணம் செலவழித்தும் கூட கப்பல் எதுவும் வரவில்லை மீனவர்களுக்கும் இறுதியில் பயன் இல்லை
நாட்டை சீரழித்த திருடர்களை வீட்டுக்கு அனுப்ப திசைகாட்டியால் மாத்திரம் முடியும் தெற்கு, மேற்கு,கிழக்கு,வடக்கு,உட்பட ஏனைய மாகணங்ககளில் அனைத்து இன மக்களின் ஒத்துழைப்புடன் ஆட்சியை நடத்த எம்மால் முடியும்
அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக இருக்க செயற்படுவோம்,பழைமைவாத அரசியலை இல்லாமல் செய்து புதிய அரசியல் பயணத்துடன் பயணிக்க திசைகாட்டியுடன் பயணியுங்கள் என்றார்.
No comments