Header Ads

Header ADS

நவீன சிந்தனைகளை நோக்கியஅரசின் பயணம் இலக்கை எட்டும்.

( செய்தியாளர்
ஏறாவூர் சாதிக் அகமட் )

ஆதிக்க சக்திகளின் பிடியிலிருந்து நாடு சுதந்திரம் பெற்ற இன்றைய தினம், நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொருவருக்கும் சிறந்த தினமாக அமைவதாக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். 

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

எமது நாடு,எவரதும் அழுத்தங்களுக்கு உட்படாமல் சுதந்திரமாகச் செயற்படுவது இலங்கையராகிய எமக்குப் பெருமைதான்.வௌிச் சக்திகளின் தேவைகளுக்காக நம்மைப் பலர் பிரித்தாள முயற்சித்தனர். இதிலிருந்து விடுபடுவதற்கு எமது மூத்த தலைவர்கள்,பாகுபாடுகளை மறந்து ஒன்றித்து உழைத்தனர். இதனாலே எமது நாடு சுதந்திரம் அடைந்தது.இதற்காக உயிர்நீத்த நமது முன்னோர்களை மறக்க முடியாது.75 வருட சுதந்திரப் பயணத்தில் நாடு சாதித்தவை ஏராளம்.இந்த வெற்றிப் பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்க சகல சமூகங்களும் ஒத்துழைக்க வேண்டும்.குறுகிய நோக்கமும்,குறுக்குச் சிந்தனைகளும் எமது எதிர்கால நகர்வுகளுக்கு தடைக்கல்லாகலாம்.
எனவே,நாமாக ஒன்றிணைந்து நமது தேவைகள்,அபிலாஷைகளை அடைந்து கொள்ள முயற்சிப்பதே தாய் நாட்டுக்குச் செய்யும் கௌரவமாகும். 

இலங்கையின் இறைமையை இன்னொரு சக்திகளின் தேவைக்காக கூறுபோடும் முயற்சிகளுக்கு ஒரு போதும் இடமளிக்க இயலாது. பொருளாதாரத்தை முன்னேற்றும் அரசாங்கத்தின் செயற்றிட்டம் வெற்றியளிக்க,இந்த சுதந்திர தினத்திலிருந்து சகரும் கை கோர்க்க முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.