தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான ரக்பி (Rugby) பயிற்சி
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான ரக்பி (Rugby) பயிற்சி
--------
(எம்.என்.எம்.அப்ராஸ்)
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் விஜயம் செய்திருந்த பல்கலையின் வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபா அவர்களிடம் மாணவர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் மாணவர்களுக்கான இரண்டு நாள் ரக்பி பயிற்சி(25)ஆரம்பமானது.
இப் பயிற்சிக்கான ஏற்பாடுகள் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் வழிகாட்டலின் கீழ் இலங்கை ரக்பி யூனியனின் அனுசரணையோடு தென்கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் ஆரம்பமானது.
வேந்தர் அவர்கள் இலங்கை ரக்பி யூனியனின் தலைவர் றிஸ்லி இல்யாஸ் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க சர்வதேச தரம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர்களான வைப் குணரத்ன (World Rugby Trainer)ஆனந்த கதுரி ஆராய்ச்சி (World Rugby Educator, Strength and Condition), சஞ்சையா அமுனுகம (Level – II Coach)சம்ரத் பெர்னான்டோ (World Rugby Coach of Match Official and Performance Analyst) ஆகியோர் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தினுடைய சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்கு ரக்பி யூனியனின் தலைவருமான கலாநிதி திருமதி சந்திரகாந்தன் அவர்களும், கிழக்கு ரக்பி யூனியனின் பொதுச் செயலாளர் அலியார் பைஸர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.இப் பயிற்சியில் பல்கலைக்கழகத்தை சமூகத்தோடு இணைக்கும் நோக்கில் கிழக்கு ரக்பி யூனியன் அங்கத்தவர்களுக்கும் வாய்ப்புக்கள் வழங்கபட்டிருந்தன.
இந் நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்திய இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகதின் பதில் உபவேந்தரும் கலை மற்றும் கலாசார பீடத்தினுடைய பீடாதிபதி
யுமாகிய பேராசியர் எம்.எம்.பாஸில் அவர்கள் தனது உரையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ரக்பி மற்றும் ஏனைய உடல்சார் விளையாட்டுக்களின் முக்கியத்துவம் பற்றியும் பல்கலைக்கழக மாணவர்கள் விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் மூலம் நேர்த்திமிக்க உடல் வலிமையுள்ள கல்வியறிவுடைய சமுதாயம் உருவாக்கப்படும் எனவும்,எமது ரக்பி அணியினர் எதிர்வரும் காலங்களில் பல்லைக்கழகங்களு
க்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதோடு மட்டுமன்றி தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளிலும் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்துவார்கள் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்தார்.
உப வேந்தரின் கட்டளைக்கமைய பல்கலைக்கழக உடற்கல்வி பதில் இயக்குனர் எம்.எல்.தாஹிர் அவர்களால் ரக்பி பயிற்சிக்கான முழு அனுசரனையும் வழங்கப்படுகின்றது.மேலும் இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுவிப்பாளர்களான எஸ்.எம்.வீ.ஆஸாத் மற்றும் முகம்மது இக்பால் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
No comments