lமாளிகைக்காடு மேற்கு வட்டாரத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல்..!
lமாளிகைக்காடு மேற்கு வட்டாரத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல்..!
-----
(எம்.என்.எம்.அப்ராஸ்)
அம்பாரை மாவட்டம் காரைதீவு பிரதேச
சபைக்குட்ப்பட்ட மாளிகைக்காடு மேற்கு வட்டாரத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியியை பலப்படுத்தும் முகமாக காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் ஏ.ஆர்.முஹம்மட் பஸ்மீரின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடல் மாளிகைக்காடு மேற்கு வட்டாரத்தில் உள்ள உறுப்பினரின் இல்லத்தில் நேற்று (18) இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்
ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில்,எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பிலும் கட்சியின் எதிர்கால முன்னேற்ற நடவடிக்கை தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூத்த போராளியும்,முன்னாள் வடக்கு-கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீத், கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினர் கலாநிதி சிராஸ் மிராசாஹிப் உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
MNM.Afras
0772961631
No comments