மாளிகைக்காடு பிரீடம் விளையாட்டு கழகத்தின் சீருடை (டீ- சேர்ட்)அறிமுகம்..!
மாளிகைக்காடு பிரீடம் விளையாட்டு கழகத்தின்
சீருடை (டீ- சேர்ட்)அறிமுகம்..!
--------------------------
அம்பாரை மாவட்டம் மாளிகைக்காடு பிரீடம் விளையாட்டுக்கழகத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கழகத்தின் புதிய சீருடை(டீ- சேர்ட்)அறிமுக நிகழ்வு கழகத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.ஹக்கீம் தலைமையில் மாளிகைக்காடு கமு /சபீனா முஸ்லிம் வித்தியாலய மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் அவர்கள் கலந்து கொண்டு புதிய சீருடையை திரைநீக்கம் செய்துவைத்ததுடன்,
இந் நிகழ்வுக்கு விசேட அதிதிகளாக அரச சார்பாற்ற நிறுவனங்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஐ.எல்.எம் இர்பான்,மாளிகைக்காடு எம்.எம்.ஆர்.
நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.மன்சூர்,காரைதீவு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் வீ.பாஸ்கரன், மாளிகைக்காடு மேற்கு கிராம சேவகர் யூ.எல்.எம். அஸ்லம் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
மேலும் இந் நிகழ்வில் கழகத்தின் செயலாளர் எஸ். நவாஸ்,பொருளாளர் எம்.ஐ.றியால் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள்,கழகத்தின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
No comments