Header Ads

Header ADS

கல்முனை-இஸ்லாமாபாத் பிரதேசத்தில் கீரின் வீச் ஆங்கில மொழிப் பாலர் பாடசாலை அங்குரார்ப்பணம்



கல்முனை-இஸ்லாமாபாத் பிரதேசத்தில் கீரின் வீச் ஆங்கில மொழிப் பாலர் பாடசாலை அங்குரார்ப்பணம்
---------
(எம்.என்.எம்.அப்ராஸ்,சர்ஜுன் லாபீர்)

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தை அடிப்படையாக கொண்டு கீரின் வீச் ஆங்கில மொழிப் பாலர் பாடசாலை(GREENWHICH ENGLISH NURSERY) அங்குரார்ப்பண நிகழ்வு இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய மண்டபத்தில் பாலர் பாடசாலையின் தவிசாளர் ஏ.ஆர்.எம்.ஜுபிர் தலைமையில் இன்று(18) இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அததியாக கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் வை.ஹபிபுல்லா,
கெளரவ அதிதியாக இஸ்லாமாபாத் முஸ்லிம் 
வித்தியாலய பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத், விஷேட அதிதியாக ஆரம்ப பிரிவு பகுதித்தலைவர் டீ. கே. எம்.முஹீசின்,சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் பிரதம இமாம் மெளவி எம்.ஐ.ஆதம்பாவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன்,பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

No comments

Powered by Blogger.