Header Ads

Header ADS

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக திரு. செய்னுல் ஆப்தீன் முஹம்மத் பைஸல் அவர்கள் இன்று உத்தியோக பூர்வமாக பதவி ஏற்றுக் கொண்டார்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக திரு. செய்னுல் ஆப்தீன் முஹம்மத் பைஸல் அவர்கள் இன்று உத்தியோக பூர்வமாக பதவி ஏற்றுக் கொண்டார். 
இலங்கை நிருவாக சேவையின் முதல்தர அதிகாரியான இவர் இலங்கை நிருவாக சேவையில் 19 வருடத்திற்கு மேலான அனுபவத்தையும் கொண்டவர். இவர் கேகாலை மாவட்ட ருவன்வெல்ல மற்றும் கலிகமுவ பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும், கேகாலை மாவட்ட கமநல சேவைத் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகவும், கமநல சேவைத் திணைக்களத்தின் பிரதான காரியாலயத்தின் ஆணையாளராகவும் (அபிவிருத்தி), அரநாயக்க பிரதேச செயலாளராகவும் உயர் பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் போது உதவிப் பணிப்பாளர்களான திரு. அன்வர் அலி, திரு. அலா அஹமட். நிருவாக உத்தியோகத்தர் திருமதி மிர்சியா தாஜூதீன் உள்ளிட்ட திணைக்கள அலுவலர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.